Categories
தேசிய செய்திகள்

இதற்கெல்லாம் இவர் மட்டும் தான் காரணம்…. அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் மோடி அரசின் மோசமான நிர்வாகத்தால் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக உபியின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து மாநிலங்களும் திணறி வருகின்றன. சிகிச்சை பெற போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு பிரதமர் மோடியே காரணம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |