Categories
தேசிய செய்திகள்

இதற்கெல்லாம் குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆலோசனை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் 2023-24ம் ஆண்டுக்கான சந்தைப் பருவத்திற்கு அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பருப்பு வகைக்கு குவிண்டாலுக்கு ரூ.500-ம், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.400-ம் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குங்குமப்பூ குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.209 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோதுமை, உளுந்து, கொள்ளு ஆகியவற்றுக்கு குவிண்டாலுக்கு ரூ.110-ம், பயறு வகைகளுக்கு ரூ.105 ம், பார்லிக்கு குவிண்டாலுக்கு ரூ.100-ம் குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்படுகிறது.

Categories

Tech |