Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்க்காகத்தான் நான் கடவுளை மன்னிக்கிறேன்”…..மேக்னா ராஜின் உருக்கமான பதிவு….!!!!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் மேக்னா ராஜ். இவர் 2009ம் ஆண்டு வெளிவந்த பெண்டு அப்பராவ் ஆர். எம். பி என்ற படத்தின் மூலமாக  சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வந்தார்.இந்தநிலையில் மேக்னா ராஜ் தனது நீண்ட கால காதலரான கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணத்துக்குப் பின்பும்  நடிகை மேக்னா ராஜ் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்துள்ளார்.இந்நிலையில் மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது சிரஞ்சீவி சர்ஜா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மரணத்தின் போது 4 மாத கர்ப்பிணியாக இருந்த மேக்னாராஜூக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா என்று பெயர் சூட்டியுள்ளார்  மேக்னா.இந்நிலையில் தனது முழு கவனத்தையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டு வந்த மேக்னாராஜ், தற்போது தான்ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் மேக்னா, தன் குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் பதிவிட்டு வருகிறார்.இந்நிலையில் மேக்னாராஜ் தனது திருமண நாளை அடுத்து தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை  பகிர்ந்துள்ளார். அதில் ’எனது மகனுக்கும் எனக்கும் அவர் சரியானதை செய்ய அவருக்கு கடவுளின் வழிகாட்டுதல் தேவை என்று எனக்கு தெரியும், அதனால் தான் நான் கடவுளை மன்னிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த உருக்கமான பதிவு இணையதளங்களில் வைரலாக பரவி  வருகிறது.

Categories

Tech |