ரஷ்யப் படைகள் கடத்தி வைத்துள்ள இரண்டு மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் கடத்தி வைத்துள்ள மேலிடோ போல் மற்றும் னிபிரோருடேனி நகர மேயர்களை உடனடியாக விடுவிக்க கோரி ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலிடோ போல் நகர மேயரை ரஷியப் படைகள் கடத்தியதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்த நிலையில், தற்போது னிபிரோருடேனி நகர மேயரும் கடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.இருமேயர்கள் கடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு தலைவர், ஒரு ஜனநாயக நாட்டின் மீது நடத்தப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு ரஷ்யா நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.