உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு ஒருவர் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.
இந்தியாவில் பல ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக பல நினைவு சின்னங்களை அமைத்துள்ளன. அதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள தாஜ்மஹால் மிகப் பெரிய புகழ் பெற்றது. அந்த வரிசையில் மத்தியபிரதேசம் ஷாஜாபுர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் இணைந்துள்ளார். அவர் தனது மனைவிக்கு ஒரு கோயில் ஒன்றை கட்டியுள்ளார். கொரோனாவால் உயிரிழந்த தன் மனைவியின் நினைவாக நினைவுச் சின்னம் ஒன்றை அமைத்து வழிபட்டு வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபுர் மாவட்டத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவரின் மனைவி கீதா பாய்.
இவர் கொரோனா 2-ம் அலையின் போது கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் நினைவாக நாராயண சிங் ரத்தோர் ஒரு கோயில் கட்டியுள்ளார். மனைவியின் பிரிவைத் தாங்கமுடியாத அவர் உருவ சிலை நிறுவி நாள்தோறும் இறைவழிபாடு செய்து வருகிறார். அவர்கள் வழக்கமாக மாலையில் சடங்குகள் செய்கிறார்கள். அவரின் மூத்த மகன் லக்கி, அவர்களின் உருவச் சிலையை நிறுவி இருப்பது, தாய் தங்களைச் சுற்றி இருப்பதாக உணர்வைத் தருகின்றது என்று கூறியுள்ளார்.