ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தெருநாய் ஒன்று 7 குட்டிகளை ஈன்றது. அந்த ஏழு குட்டிகளை தற்போது மூன்று குட்டிகள் மட்டுமே உயிரோடு இருக்கிறது. இந்நிலையில் இந்த நாய் தனது நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்து வரும் நிலையில், அதனோடு பன்றிக்குட்டியும் சேர்ந்து பால் குடித்து வருகிறது.
இது அந்த பகுதியில் உள்ள மக்களை ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. அந்த நாய் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் போது அதை தடுக்காமல் பால் கொடுப்பது பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிகழ்வை ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.