யாஷிகாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் அண்மையில் கார் விபத்து ஏற்பட்டதில் இவரின் தோழி உயிரிழந்த நிலையில் இவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்.
நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எனக்கு காதல் எல்லாம் செட்டாகாது, திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் அதுவும் அரேஞ்ச் மேரேஜ் எனவும் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்து விட்டேன் என பதிவிட்டு இருக்கிறார். எனக்கு திருமணம் ஆக இன்னும் 10 வருடங்கள் ஆகும் எனவும் அதில் கூறியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுதான் உங்க ட்விஸ்ட்டா…? இது எங்களுக்கு நேற்றே தெரியும் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.