Categories
உலக செய்திகள்

இதான் என்னோட வாழ்க்கை அனுபவம்…! அமீரக துணை அதிபர் வெளியிட்ட வீடியோ ..!!

அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்.

அமீரக துணை அதிபரான மேதகு ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தனது வாழ்க்கையில் இதுவரை நடந்த அனுபவங்கள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோவில், ‘நாம் எந்த வேலையை செய்தாலும் முழு மனதுடனும்,பொறுப்புடனும் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் கனவுகள்  இருந்து கொண்டு  தான் இருக்கும். அந்தக் கனவை நிஜமாக்க வேண்டும்  அதுதான் தலைவர்களின் பண்பு’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ‘தமது வாழ்க்கையில் எடுத்துக் கொள்ளக் கூடிய மிகப் பெரிய சவால் என்பது அவர் இதுவரை சவாலை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே ஆகும்’ என்றும்  அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார் .துணை அதிபரின் இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில் அதிகமானோர்  பார்வையிட்டு அந்த வீடியோ வைரலாகி வருகின்றது. மேலும் துணை அதிபருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |