Categories
அரசியல்

இதான் சரியான நேரம்….நம் சக்தியை காட்டுவோம்… எச்.ராஜா திடீர் அழைப்பு ..!!

தரிசனத்திற்கு ஆலையங்களை திறக்க வேண்டும் என பாஜக நடத்தும் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்து எச்.ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3நாட்களுக்கு இந்து கோயில்களை திறந்து, பக்தர்களை தரிசனம் பெற அனுமதிக்கவேண்டும் என பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள பாஜகவின் மூத்த  தலைவர் எச்.ராஜா,  வருகின்ற 7.10.2021 அன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுடைய முடிவின்படி தமிழகத்தில் இந்து மக்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கின்ற மிகப்பெரிய அநீதி என பேசியுள்ளார்.

மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஹிந்து கோவில்களை அடைத்து வைக்கிறார்கள் எதுக்காக ? இதே மாதிரி மாற்று மதத்தில் பண்ண முடியுமா ? வெள்ளிக்கிழமை ,சனிக்கிழமை மசூதி, சர்ச்சை மூட முடியுமா ? இந்துக்களை அவ்வளவு கேவலமாக நினைக்கிறது இந்த அரசாங்கம், அதனால பண்ணுது. ஆகவே அதை எதிர்த்து எல்லா நாட்களிலும் இனி கோவில்கள் திறந்து வைக்கப்பட வேண்டும் என்கின்ற இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இதுல கொரோனா பூச்சாண்டி எல்லாம் காட்ட முடியாது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், இன்னும் பதினெட்டு வயசு கீழே இருக்கிற குழந்தைகளுக்கு தடுப்பூசி போடல. கோவில்களுக்கு வரவங்களுக்கெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்களை தடுக்கிறார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை, பள்ளிகள் திறக்குது. எனக்கு புரியுது பள்ளிகளை திறக்கிறது பத்தி. ஆனால் குழந்தைகள் பூங்கா திறந்து விட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் குழந்தைகள் கடந்த 4 நாட்களாக பூங்காவில் விளையாடுகிறார்கள். அப்போது தொற்று பரவாதா ? மூன்றாவது அலை வராதா ? யாரை ஏமாத்துறாங்க.

கேப்பையில் நெய் வடியுதுன்னா… கேப்பாருக்கு மதி எங்கே போச்சு என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரி ஹிந்துக்களை ஏமாற்றுவதற்காக இந்த ஹிந்து விரோத அரசாங்கம். இந்த அரசாங்கம் யாரோடது ? ஸ்டாலினோடது, ஸ்டாலின் யாரு ? தன் வாழ் நாளில் ஹிந்துக்களுக்கு அவர் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத தலைவர், திமுக வாழ்த்து சொல்லாத கட்சி. அதனால் இதற்கு எதிராக நாம் நம் சக்தியை காட்ட வேண்டும்.

இதுக்கு ஒரு மகாபாரதத்தில் இருந்து ஒரு உதாரணத்தைச் சொல்லி …இங்கு அனைவரும் யார் யாரெல்லாம் வரனும் ? இந்த கோவிலுக்கு நான் தினந்தோறும் போவேன்… என்னை தடுக்க நீ யார் ? அப்படி என்ற உணர்வாளர்கள், தைரியம் இருக்கிற ஹிந்து, அதே மாதிரியாக இந்த கோவிலை நம்பி எத்தனை பேர் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எல்லோரையும் போய் நாம் கூப்பிடவேண்டும், அவர்கள் வரவேண்டும் அதே மாதிரியாக இதுதான் நம்முடைய சக்தியை கட்டுவதற்கான சரியான நேரம் என அழைப்பு விடுத்துள்ளார்.

Categories

Tech |