Categories
தேசிய செய்திகள்

இதான் சரியான நேரம்…! பாஜகவுக்கு எதிராக ஸ்கெட்ச்…. மம்தா பானர்ஜி அதிரடி …!!

மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராக மேற்குவங்கத்தில் மிகப்பெரிய பேரணி நடத்த எதிர்க்‍கட்சி தலைவர்களுக்‍கு முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களுக்‍கு குறித்து, எதிர்க்‍கட்சிகள், பொய்களை பரப்புவதாகவும், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும், மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, புதிய வேளாண் சட்டங்கள் குறித்து மக்களிடையே பொய்களை பரப்புவது, மத்திய பா.ஜ.க. அரசா? அல்லது எதிர்க்‍கட்சிகளா? என்று, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கண்டன அறிக்‍கை வெளியிட்டுள்ளன.

இதனிடையே, மேற்குவங்கத்தில் முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரசுக்‍கும், பா.ஜ.க.வுக்‍கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி, இரு கட்சிகளுக்‍கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேற்குவங்க அரசுடன் ஆலோசனை நடத்தாமல், ஐ.பி.எஸ். அதிகாரிகளை, மத்திய உள்துறை அமைச்சகம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுக்‍கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து கொல்கத்தாவில் மிகப்பெரிய பேரணியை நடத்த மேற்கு வங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு.சரத்பவார், ஆம் ஆத்மி தலைவர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |