Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதான் டுவிட்டர் வாத்தியாரே’… ஒரிஜினல் பசுபதியை அறிமுகம் செய்து வைத்த ஆர்யா…!!!

நடிகர் ஆர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. பா.ரஞ்சித் இயக்கியிருந்த இந்த படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் கபிலனாக நடித்த ஆர்யாவும், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியும் சைக்கிளில் போகும் காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனிடையே நடிகர் பசுபதியின் பெயரில் பல போலி ட்விட்டர் பக்கங்கள் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் பசுபதியின் உண்மையான டுவிட்டர் பக்கத்தை பகிர்ந்த ஆர்யா ‘வாத்தியாரே இதான் டுவிட்டர் வாத்தியாரே. பாக்ஸிங்க விட ரத்த பூமி. உன்னோட பேருல இங்க நிறைய பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தான்டான்னு உள்ள வந்த பாத்தியா. உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த உலகத்துக்குள்ள போலாம்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு பதிலளித்த பசுபதி ‘ஆமாம் கபிலா, பாக்ஸிங்கே உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுனா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்ளயே பின்னாடி உட்கார்ந்துகிறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிகினு போ’ என தெரிவித்துள்ளார். தற்போது இவர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |