Categories
உலக செய்திகள்

இதான் நம்ம மோடி சர்க்கார்…! புகழின் உச்சியில் இந்தியா… உலகளவில் செம கெத்து …!!

ஐஎம்எப்_பின்  பொருளாதார நிபுணர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்கை சிறப்பாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஓராண்டு காலமாக உலக மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இதற்கு தீர்வுகாணும் வகையில் பல நாடுகள் இணைந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்திய நாடும் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகின்றது.

இந்தியா சர்வதேச அளவில் செய்துவரும் உதவிகள் குறித்து பேசிய, சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், இந்தியாவின் தடுப்பூசி கொள்கை  மிகச் சிறப்பாக உள்ளது என்றும், நோய்த்தொற்றை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்றார்.

மேலும் இந்தியா தடுப்பூசி கொள்கை மூலம் உலக நாடுகளுக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகம் முழுவதும் சுகாதார  நெருக்கடி உள்ள நிலையிலும் , தடுப்பூசி   தயாரிக்கும் மையமாக  இந்தியாவே உள்ளது என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். இதனால் பிரதமர் மோடியை பலரும் பாராட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |