தேர்தலன்று வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியையும், கூடுதலாத ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் நிர்பந்தத்தின் அடிப்படையில் வருடம் முழுவதும் செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை இதற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. ரூ.7,000 மட்டுமே ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அதுவும் பணியாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை.
வாக்காளர்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படுகின்றன சிறப்பு ஊதியமம் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு இனிவரும் காலங்களில் அலுவலர் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். இருக்கை வசதிகள் அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நல இயக்குனர், தேர்தல் ஆணையர், ஐ.சி.டி.எஸ். திட்ட இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.