Categories
தேசிய செய்திகள்

இதிலிருந்து எப்படி முன்னேறும்….இந்தியாவை overtake பண்ணிய பிரபல நாடுகள்…. எதற்கு தெரியுமா?….!!!!

இந்த ஆண்டிற்கான பட்டினி குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை கொண்டு உலக பட்டினி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான   தரவரிசை பட்டியலை பல அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை  வெளியிட்டுள்ளது. அதில் 107-வது இடத்திற்கு சென்று இந்தியா பின்தங்கியுள்ளது.

இதனையடுத்து அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99-வது இடத்திலும், வங்கதேசம் 84-வது இடத்திலும், நேபாளம் 81-வது இடத்திலும், இலங்கை 64-வது இடத்திலும், மியான்மர் 71-வது இடத்திலும் முன்னோக்கியுள்ளது. இதனையடுத்து தரவரிசை பட்டியலில் குறியீடு புள்ளிகளுக்கும்  குறைவாக பெற்று சீனா, துருக்கி, குவைத் ஆகிய நாடுகள்  முதல் 3 இடங்களை பெற்றுள்ளது. இந்தியா கடந்த 2020-ஆம் ஆண்டு 94-வது இடத்திலும், கடந்த ஆண்டு 101-வது இடத்திலும் இருந்தது. ஆனால் தற்போது மேலும் பின்தங்கி இருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |