Categories
உலக செய்திகள்

இதிலிருந்து பின்வாங்கிய உக்ரைன் படைகள்…. ரஷ்யாவுக்கு கிடைத்த வெற்றி….!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 131வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் ஆகிய உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவிக்கிறது. இந்த நிலையில் உக்ரைனின் லூகன்ஸ்மாகாணம் முழுதையும் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா இன்று அறிவித்துள்ளது. அதாவது இந்த மாகாணத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த லிசிசண்ஸ்க் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. இதன் வாயிலாக லூகன்ஸ் மாகாணம் முழுதையும் கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. சென்ற பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, துவக்கத்தில் தலைநகர் கீவை மட்டுமே குறிவைத்தது.

ஆனால் அப்போது எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காததால் கிழக்கு உக்ரைன் பக்கம் கவனத்தை திருப்பியது. டான் பாஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை கைப்பற்றினால் கிரீமியாவுடன் இணைத்து கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்றி விடலாம் எனக் கணக்குப்போட்டது. அந்த வகையில் அப்பகுதியில் முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. அதன்பலனாக மரியுபோல் நகரம் வீழ்ந்தது. பின் செவோரோ டொனட்ஸ்க், லிசிசான்ஸ்க் என தொடர் வெற்றிகளைப் பெற்று, இப்போது லுஹான்ஸ்க் மண்டலத்தை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யா கொண்டு வந்துள்ளது. இதில் லிசிசான்ஸ்க் நகரில் இருந்த உக்ரைனிய படைகள் பின்வாங்கிவிட்டதால், கிழக்கு உக்ரைன் ரஷ்யா வசமாகிவிட்டது.

Categories

Tech |