பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். கட்சி தலைமைக்கு தெரியாமல் கோவையில் மாவட்ட நிர்வாகிகள் பந்த் அறிவிக்க முடியுமா?கட்சித் தலைவர் என்ன செய்ய வேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி பந்தை ரத்து செய்ய வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்ப்பதற்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஆனால் ஊடகங்கள் மூலம் வளர்க்க நினைப்பது என்பது மக்கள் ஏற்காத ஒரு நடைமுறை.
நீதிமன்றத்தில் தனக்கும் பந்திற்கும் சம்பந்தமில்லை எனக் கூறுகிறார் பாஜக தலைவர். முதலில் பாஜகவினர் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.அதற்கு முன்பு அரசியல் கோமாளிகள் தொடர்பான கேள்விகளை தன்னிடம் கேட்காதீங்க என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக தான் கோமாளித்தனத்தின் மொத்த உருவம் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அண்ணாமலை தான்.ஆனால் திமுக இதைப் பற்றி எதுவும் தெரியாமல் திணறு எதன் காரணமாகவே இதன் விசாரணை தேசிய புலனாய்வுக்கு சென்றுள்ளது. இதிலிருந்து தெரியவில்லையா யார் கோமாளி என்று திமுகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.