Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதிலும் கலப்படம் செய்யுறாங்களா… அதிகாரிகளின் தீவிர சோதனை… நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை…!!

பூச்சி கொல்லி மருந்துகளில் கலப்படம் செய்தால் உரிமம் பறிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிமாநிலத்தில் பூச்சிகொல்லி மருந்துகள் உடன்  போலியான உயிரி பூச்சி மருந்துகளை சேர்த்து கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து பூச்சி மருந்து விற்பனை கடைகளை ஆய்வு செய்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களை கொண்ட ஒரு குழுவனது அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ளும் போது போலியான உயிர் பூச்சி மருந்து விற்பனை செய்யப்படுவது கண்டறியபட்டாலோ அல்லது இதர பூச்சி கொல்லி மருந்துகளுடன் போலி உயிரி பூச்சி மருந்துகளை சேர்த்து கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரியவந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சட்ட விதிபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துயுள்ளனர். இந்த கலப்படமான உயிர் பூச்சி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலம்  உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்களின் தரம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புகார்களை வட்டார வேளாண் உதவி இயக்குனர்களிடம்  கூறலாம் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |