இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கின்றார். இத்திரைப்படத்தை அடுத்து தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா கேரக்டர் எனவும் அவருக்கு ஆறு வில்லன்களாக முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கலையரசனை சந்தித்திருக்கின்றார். இது குறித்தது கலையரசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, நீண்ட நாட்களுக்கு பின்னர் மச்சி லோகேஷ் கனகராஜை சந்தித்திருக்கின்றேன். எப்போதும் போல் தளபதி 67 திரைப்படத்திலும் நான் இல்லை. அவரது யுனிவர்சின் சிறந்த விஷயங்கள் விரைவில் வரும் என பதிவிட்டுள்ளார். மேலும் புகைப்படத்தையும் பகிர்ந்து இருக்கின்றார்.
Met Machi @Dir_Lokesh after a long time …. As usual he said I am not part of his movie #Thalapathy67 #friendslove better things on the way 🔥🔥🔥in his universe 💥💥💥 pic.twitter.com/rW4i7XKXUX
— Kalaiyarasan (@KalaiActor) October 9, 2022