செம்மொழி மாநாடு போல் செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் திமுகவின் குடும்ப ஆதிக்கம் தான் இருந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதை பொருளை தடுப்பதில் திமுக அரசு நூறு சதவீதம் தவறிவிட்டது. தினமும் பத்திரிக்கையை திறந்தாலே கொலை, கொள்ளை மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற செய்திகள்தான் இருக்கின்றன. அதிமுகவை ஒடுக்குவதிலும் அழிப்பதிலும் தான் முதல்வர் சர்வாதிகாரியாக இருக்கின்றார்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை. உதயநிதியின் புகழ் பாடும் அமைச்சர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பின் மகேஷ் பள்ளி கல்வித்துறையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யாமல், உதயநிதியின் ரசிகர் மன்ற வேலைகளை தான் செய்கிறார் என்று கூறியுள்ளார்.