மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் அதிகமான மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக நமது மாவட்டத்தில் 15 நாட்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு ஆகியவை வழங்கப்படும். எனவே நமது மாவட்டத்தில் உள்ள 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் இன்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாமிற்கு இந்திய கால்பந்து அணிக்காக பலமுறை விளையாடிய வீரர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.