Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதில் இறந்தவர் போர் வீரரா..? அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதுமக்கள் தாழி… ஆராய்ச்சியாளர்கள் சோதனை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகையில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது 2-வது முதுமக்கள் தாழியில் எலும்புகள், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியிலும், அதன் அருகே உள்ள அகரத்திலும், கொந்தகையிலும் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இரண்டு முதுமக்கள் தாழி முதலாவது குழியில் கண்டெடுக்கப்பட்டது. அதில் விலா எலும்புகள், முதுமக்கள் தாழியின் மனித மண்டை ஓடு, மூட்டு எலும்புகள், கை, கால் எலும்புகள், கூம்பு வடிவ இரண்டு மண் கிண்ணங்கள், இரும்பு வாள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் இரும்பு வாள் இருந்ததால் முதுமக்கள் தாழியில் இறந்தவர் போர் வீரராக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டது.

இந்த எலும்புகள் மரபணுச் சோதனைக்கு பிறகே இறந்தவர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவரும். இந்நிலையில் இரண்டாவது முதுமக்கள் தாழியை நேற்று முன்தினம் ஆய்வு செய்த போது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆய்வு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று மீண்டும் பணி தொடங்கியது. அதில் இரண்டாவது முதுமக்கள் தாழியில் வாயில் உள்ள தாடைப்பகுதி, மண்டை ஓடு மற்றும் பல எலும்புகள் எடுக்கப்பட்டன. அவை பரிசோதனைக்க அனுப்பப்பட உள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |