நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான் ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு கடந்து விட்டது. இன்னும் வழங்கவில்லை. கேட்டால் நிதிநிலை சரியான உடன் வழங்கபடும் என சொல்கிறார். அப்படி என்றால் கலால் வரி, சொத்து வரி என்று பல மடங்கு வரிகளை பொதுமக்களின் தலையில் சுமத்தி அரசின் வருமானம் பெருகிவிட்டது என நிதி அமைச்சர் கூறுவது பொய்யா?
திராவிட மாடல் ஆட்சியில் இந்திய அபார வளர்ச்சி பெற்று உள்ளது என்ன கூறுவது பொய்யா? இந்நிலையில் வரியை உயர்த்தியும், மது விற்பனை இரு மடங்கு அதிகரித்தும் இன்னும் கூட நிதி நிலைமை சரியில்லை என்றால். அப்படி மோசமான நிதிநிலை வைத்துக் கொண்டு எதற்கு இலவசம் கொடுக்கிறீர்கள்? இலவசம் என்று நீங்கள் கொடுக்கிறது மக்களின் வரிப்பணம் தானே? அவர்கள் பணத்தை அவர்களுக்கே கொடுத்துவிட்டு இலவசம் என்று ஏன் ஏமாற்றுகிறீர்கள் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.