சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவி தனது தோழிகள் குளிப்பதை வீடியோ எடுத்து தனது ஆன் நண்பர் ஒருவருக்கு அனுப்பி உள்ளதாகவும், இந்த வீடியோ அனைத்தும் இன்டர்நெட்டில் கசிந்துள்ளதாகவும், இதனால் 10 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் இரண்டு மாணவிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் காவல்துறையினர் இவை அனைத்தும் பொய்யானது என நிராகரித்துள்ளனர்.
மேலும் இது குறித்து பல்கலைக்கழகத்தின் மாணவர் நல அதிகாரி கூறியதாவது. மாணவிகள் தற்கொலை முயற்சி எதுவும் செய்ய இல்லை. ஒரு மாணவி மட்டும் மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். தற்போது அவரும் நலமாக உள்ளார். ஆனால் விடுதி மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் ஆர். எஸ். பாவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 60 மாணவிகள் குளித்த வீடியோக்கள் லீக் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் முழுவதும் பரவி வரும் வதந்தி முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது. பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவி மட்டும் தனது தனிப்பட்ட வீடியோவை தனது ஆன் நண்பனின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். மற்ற மாணவிகளின் வீடியோ எதுவும் அவ்வாறு அனுப்பப்படவில்லை. மேலும் அந்த மாணவி மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இந்த சம்பவம் மாநில முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.