மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் முதலமைச்சரின் விரிவாக்க மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான 4 -ஆம் ஆண்டு நினைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். மேலும் இதில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் காந்திமதி, அனைத்தும் அரசு மருத்துவக் கல்லூரி டீன்கள், மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் விழாவை தொடங்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த திட்டத்தின் மூலம் இதுவரை நமது தமிழ்நாட்டில் 1.40 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டங்கள் கடந்து 2018 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது நான்காவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்நிலையில் 796 அரசு மருத்துவமனைகள், 937 தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் மூளைச்சாவு உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தில் கடந்த 2021 -ஆம் ஆண்டு விடியல் என்னும் முழு தானியங்கு செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் உறுப்பு தானங்கள் வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இதனையடுத்து உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவகை சிகிச்சை அளிப்பதிலும், உறுப்பு தான விழிப்புணர்வுகளிலும் நமது தமிழ்நாடு முன்னிலையில் வைக்கிறது. உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் ஒருவர் கூட இல்லாத இலக்கை விரைவில் அடைய வேண்டும் என அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.