சபரிமலை ஐயப்பன் கோவில்களுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யக்கூடாது என கேரள அரசு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவதால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பாக கேரளா அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கேரள மோட்டார் வாகன துறை சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாமி தரிசனம் செய்ய வரும் ஐயப்ப பக்தர்கள் பொது போக்குவரத்து மற்றும் வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளனர். அதே சமயம் மோட்டார் சைக்கிள்களில் பம்பைக்கு செல்வது போன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் தூக்கமின்மை அல்லது சோர்வுடன் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.