Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதில் மருத்துவ குணங்கள் உள்ளது..! வியாபாரிகளை தேடிச் செல்லும் மக்கள்… விற்பனை அமோகம்..!!

பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நேற்று 106 டிகிரியாக கொளுத்தியது. எனவே வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழரசம், மோர் ஆகியவற்றை வாங்கி அருந்துகின்றனர். இதனால் விற்பனையும் அமோகமாக உள்ளது. அதேபோல் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரங்களில் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மேலும் நுங்குகளில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால் பொதுமக்கள் வியாபாரிகளை தேடி சென்று நுங்குகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறும்போது, நுங்குகள் அனைத்தும் காலை 10 மணிக்கு கடை விரித்தால் மதியம் 2 மணிக்குள் விற்று விடுகிறது. மேலும் நுங்கு வெட்டுதல், பனை மரங்களை குத்தகைக்கு எடுத்தல், விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் என அதிகளவில் செலவு உள்ளது. அதேபோல் 5 நுங்குகளை வெட்டி எடுத்து ரூ. 20-க்கு விற்கிறோம் என்றார்.

Categories

Tech |