முன்னாள் முதல்மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “உடுப்பியில் 6 முஸ்லிம் மாணவிகளால் ஹிஜாப் விவகாரம் முதலில் தொடங்கியது. இதற்கு அங்கே தீர்வு கண்டு இருந்தால் இவ்விவகாரம் மாநிலம் முழுதும் பரவி இருக்காது. எனினும் அரசே அந்த விவகாரம் மற்ற பகுதிகளிலும் பரவ அனுமதித்தது. இதையடுத்து ஹலால் இறைச்சி வாங்க வேண்டாம் என சில இந்து அமைப்புகள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ததை அதை அரசு கண்டு கொள்ளவில்லை. அதன்பின் ஹலால் இறைச்சிக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் இந்து கோவில்களின் அருகில் முஸ்லிம் வியாபாரிகள் கடைகளை வைக்க அனுமதி இல்லை என பிரசாரம் மேற்கொண்டனர். இது குறித்து சட்டத்தை சென்ற 2002ஆம் வருடம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக சட்டசபையில் அரசு கூறியது. இச்சட்டத்தை பா.ஜனதா தன் முந்தைய ஆட்சிக்காலத்தில் ஏன் அமல்படுத்தவில்லை.
இதற்கிடையில் தீவிர விவகாரங்களில் முதல்மந்திரி பசவராஜ் பொம்மை மென்மையாக செயல்படுகிறார். இந்த ஆட்சியை சில பேர் ரிமோட் வாயிலாக இயக்குகிறார்கள். மேலும் அரசு தன் பொறுப்புகளில் இருந்து விலகிகொள்கிறது. விலைவாசி அதிகரிப்பு, பணவீக்கம் ஆகியவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரசு முயற்சி செய்கிறது. ஆகவே முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் நடத்தப்பட்டு வந்தாலும்கூட கோலார், ராமநகரில் விவசாயிகளிடம் முஸ்லிம் வியாபாரிகள் மாம்பழம் கொள்முதல் செய்கிறார்கள். இதனிடையில் இந்துக்கள் ஓட்டுகளை ஒருங்கிணைக்கவே மத பிரச்சினைகளை பா.ஜனதா தூண்டி விடுகிறது. இருப்பினும் இது அந்த கட்சியையே திருப்பி தாக்கும். தற்போது பா.ஜனதா மக்கள் பிரச்சினைகளை விடுத்து மத பிரச்சினைகளை தூண்டிவிடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.