1070 அடி உயர அடுக்குமாடி கட்டிடத்தில் ஸ்பைடர் மேன் போல் ஏரிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் பிரான்சிஸ்கோ என்ற நகரம் அமைந்துள்ளது இந்த நகரத்தில் உயரமான கட்டிடமாக கருதப்படும் Salesforce tower மீது மேய்சன் டெஸ்சாம்ப்ஸ் என்ற 22 வயதுடைய கல்லூரி மாணவர் ஒருவர் ஸ்பைடர்மேன் போன்று ஏறியுள்ளார். அமெரிக்காவின் கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்ட வரைவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவர் 61 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏறியுள்ளார்.
மேலும் போலீசார் தொடர் எச்சரிக்கை கொடுத்தும் பொருள்படுத்தாமல் 1070 அடி உயர கட்டிடத்தின் மீது ஏறிய டெஸ்சாம்ஸை அங்கு வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.