தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் தங்களுடன் 3 நபர்களை மட்டும் அழைத்துவர வேண்டும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் கண்டிப்பாக முகக்கவசம் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருவதால் கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைத்து காண்பிப்பதாக சமூக வலைதளங்களில் சிலர் கூறிவருவது தவறான ஒன்று என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.