நேற்று நடிகர் விஷ்ணு விஷால் தனது புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதைத்தொடர்ந்து இவர் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் எப்.ஐ.ஆர், மோகன்தாஸ், இன்று நேற்று நாளை -2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
START TO A NEW PROJECT….
DETAILS ONCE TITLE IS CONFIRMED…@VVStudioz
@shravanthis111A very good entertainer…
The only script ive held on to for 3 years to make it at the right time…#positivity pic.twitter.com/qyGuTdBH4b
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) August 2, 2021
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போட்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்தின் திரைக்கதைக்காக தான் மூன்று வருடம் காத்துக் கொண்டிருந்தேன்’ என பதிவிட்டுள்ளார் . மேலும் இந்த படத்தில் ஸ்ரவந்தி சதீஷ் என்பவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.