Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டோம்… இப்போ இப்படி ஆயிடுச்சு… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் உள்ள சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் தக்காளி சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளிகள் சராசரியாக 5 டன் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏராளமான விவசாயிகள் அய்யலூரில் நேற்று நடைபெற்ற சந்தையில் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு தக்காளிகள் பெட்டி, பெட்டியாக குவிந்தது.

தக்காளி வரத்து அதிகரிப்பு காரணமாக விலை வீழ்ச்சியடைந்தது. ரூ.40 முதல் 60 வரை 14 கிலோ எடை உள்ள தக்காளி பெட்டி ஒன்று விற்பனை செய்யப்பட்டது. அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.4 மட்டுமே விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது. செடிகளுக்கு உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி, கூலியாட்கள் மூலம் பறித்து, பாதுகாத்து வளர்த்து அவற்றை சந்தைக்கு கொண்டு வந்தால் போதுமான விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |