இங்கிலாந்தில் Novavax என்ற கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இங்கிலாந்தில் தற்போது வரை மாடர்னா உட்பட 4 தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் novavax என்ற nuvaxovid நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆகையினால் அந்நாட்டில் மொத்தமாக இதனையும் சேர்த்து கொரோனாவுக்கு எதிராக 5 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.