Categories
உலக செய்திகள்

“இதுக்கு அனுமதி கொடுத்தாச்சு”…. பல வழக்கில் சிக்கிய நிறுவனர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இங்கிலாந்தின் உச்சநீதிமன்றம் அமெரிக்காவிற்கு நாடு கடத்துவது தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

லண்டன் காவல்துறை அதிகாரிகளால் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனரான அசாஞ்சே பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அசாஞ்சே அதன் நிபந்தனை விதியை மீறி ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றத்திற்காக லண்டன் காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். இது ஒரு பக்கமிருக்க அசாஞ்சே அமெரிக்க ரகசியங்களை வேவுபார்த்த கூட்டத்திற்காக அந்நாட்டிற்கு அவரை கடத்த லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அசாஞ்சே சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை விசாரணை செய்த நீதிபதிகள் அசாஞ்சே லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

Categories

Tech |