Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு எங்களுக்கு அனுமதி குடுங்க..! நாட்டுப்புற கலைஞர்கள்… முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நாட்டுப்புற கலைஞர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் மனுக்களை கொண்டு வந்து பெட்டியில் போட்டு விட்டு சென்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தோழர் ஜீவா அம்பேத்கர் நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேஷ், தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆசைமுத்து ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேடமிட்டு வந்த நாட்டுபுற கலைஞர்கள் முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடனமாடி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் அவர்கள் கூறுகையில், நலவாரியத்தில் பதிவு பெறாத, பதிவு பெற்ற அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் ரூ.10,000 நிவாரண தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும். கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை கடந்த வருடம் சரியாக கிடைக்கவில்லை. இந்த வருடம் அனைவருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.

நாட்டுப்புற கலைஞர்களுக்கு அடையாள அட்டை, நலவாரிய அட்டை, கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவை தடையின்றி கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஓய்வூதியம் கிடைப்பதில்லை மூத்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களைந்திட வேண்டும். கொரோனா விதிமுறை காலங்களில் பண்டிகை காலம், திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசு விளம்பர நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர்களில் சிலர் பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரனுடன் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.

Categories

Tech |