ஊராட்சிமன்ற செயலர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள தனக்கன்குளம் பகுதியில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூரக்குளம் ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்டாலின் திடீரென தூக்குபோட்டு கொண்டு உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஸ்டாலினை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்டாலின் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையறிந்த திருநகர் காவல்துறையினர் ஸ்டாலினின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து ஸ்டாலின் தற்கொலை செய்து கொண்டதற்க்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.