Categories
உலக செய்திகள்

இதுக்கு ஏன் தடை போட்டீங்க….? கேள்வி கேட்ட பாராளுமன்றம்…. அதிரடி முடிவெடுத்த போரிஸ் ஜோன்சன்…!!

ஆக்ஸ்போர்டும்  – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த  தடுப்பூசியை பிரதமர் போரிஸ் ஜோன்சன் போட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் அரசு ஆக்ஸ்போர்டும் – அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி அந்நாட்டு மக்களுக்கு செலுத்தி வந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. இதனால் பிரிட்டன் அரசு இந்த தடுப்பூசியை  பயன்படுத்தும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இதனிடையே உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து நிறுவனமும் அஸ்ட்ராஜெனேகா  தடுப்பூசிகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு இறுதியில் ரத்தம் உறைதலுக்கும் இந்த தடுப்பூசிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று  தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது  குறித்தும், அதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறித்தும் அந்நாட்டு பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்

Categories

Tech |