இலங்கை நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து எரிபொருள் இறக்குமதிக்கு கூட போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசு ரூ 750 கோடி அந்நிய செலாவணி கையிருப்பு வைத்திருந்தது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2019-ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும். இது 2001-ஆம் ஆண்டு 250 கோடியாக குறைந்து விட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை அரசின் மதிப்பும் குறைந்து விட்டது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு போதிய அளவு இல்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு கூட போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்திய அரசு பெட்ரோலிய பொருட்களை கொடுத்து உதவினாலும் இலங்கையால் இந்த நிலைமையை சமாளிக்க முடியவில்லை. தற்போது இலங்கை நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில கூறுகையில் “இன்று கப்பல்களில் இறக்குமதியான எரிபொருளை வாங்குவதற்குக் கூட போதிய அந்நிய செலாவணி இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நாட்டில் தீவிர எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு நாடு முழுவதும் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.