Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் வச்சுருந்தாங்களா..? அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த மர்மநபர்கள்… போலீஸ் தீவிர விசாரணை..!!

பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பெரம்பலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பெரியண்ணன் தலைமையிலான குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சில மர்ம நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கையில் இருந்த கவர்களை அதிகாரிகளை கண்டதும் வீசிவிட்டு தப்பி ஓடினர்.

அந்த கவர்களை அதிகாரிகள் எடுத்து பிரித்து பார்த்தனர். அப்போது அதில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் ரூ.6,600 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் பின் அந்த பணத்தை பறக்கும் படையினர் மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |