Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இதுக்கு நீ தான் காரணம்… இரு தரப்பினரிடையே மோதல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

இரு கட்சிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் காவல்துறையினர் 8 பேரை கைது செய்துள்ளனர்.  

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூரில் அ.தி.மு.க கிளைச் செயலாளர் பச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவரது வீட்டின் அருகில் தி.மு.க நிர்வாகியான சார்லஸ் என்பவர் தனது கட்சி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்களான பொன்னர், ரகுபதி, ஸ்டீபன், சரவணன், பாக்கியராஜ், இளையராஜா, மற்றும் சுப்பிரமணி போன்றோர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் சார்லஸின் நண்பர் இளையராஜா பச்சைமுத்துவிடம்  நீ தான் போலீசை வரவழைத்து எங்கள் மீது புகார் கூறினாய் என வாக்குவாதம் செய்துள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் அனைவரும் இணைந்து பச்சைமுத்துவை அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த பச்சைமுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |