Categories
தேசிய செய்திகள்

இதுக்கு பேர் தான் அதிஷ்டம்…. காலையில் கூலி தொழிலாளி…. மாலையில் லட்சாதிபதி….!!!!

கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதன் முதல் பரிசு  ரூ12 கோடி ஆகும். டிக்கெட் விலை  ரூ300. முதலில் 24 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இதையடுத்து சில வாரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை ஆகிவிட்டது. அதன்பின் மேலும் 9 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது.

அதுவும் விற்பனையானதை அடுத்து கூடுதலாக 8.34 லட்சம் டிக்கெட்டுகள்  அச்சடிக்கப்பட்டது. இந்த நிலையில் லாட்டரி குலுக்கலானது நேற்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அப்போது முதல் பரிசு ரூ12 கோடி,  XG 218582 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு கிடைத்தது. இந்த லாட்டரி டிக்கெட் கோட்டயம் மாவட்டத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது.

அதை வாங்கிய அதிர்ஷ்டசாலி கோட்டயம் ஐமனம் என்ற பகுதியை சேர்ந்த சதானந்தன் என்று தெரியவந்துள்ளது. பெயின்டிங் தொழிலாளியான இவர் நேற்று காலைதான் இந்த டிக்கெட்டை அருகிலுள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளார். காலையில் வாங்கிய டிக்கெட்டுக்கு மாலையில் இவருக்கு ரூ12 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சதானந்தனுக்கு ராஜம்மா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர்.

Categories

Tech |