தமிழக அரசு சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதற்கு பல கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சொத்துவரி உயர்த்துவதற்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கூறுவதை ஒருபோதும் கேட்காத திமுக அரசு தற்போது சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி விமர்சித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து போது தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன்வர வில்லை. ஆனால் தற்போது சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என குற்றம் சாட்டி வருகின்றது. அதிமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட சொத்துவரி உயர்த்தவில்லை என்று கூறிய அவர், சொத்து வரி உயர்வு எவ்வளவு பெரிய பாரம் என்பது அதைக் கட்டும் பொதுமக்களுக்கு தான் தெரியும் என்று அவர் விமர்சித்துள்ளார்.