Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேலயும் தாங்க முடியாது…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியால் அவதிப்பட்ட கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள செவிந்திப்பட்டியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி சரியாகததால் சரவணன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த சரவணன் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக சரவணனை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்ட நிலையிலும் சரவணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |