குக் வித் கோமாளி சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு தினத்தில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே எபிசோட் ஒளிபரப்பானது . அதில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் சகிலா மற்றும் அஸ்வின் 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு, பிக் பாஸ் முகின் ராவ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இணைய வழியில் போட்டியாளர்களுடன் உரையாடினார்.
What more do I want?🥺❤️@arrahman #cookwithcomali2 pic.twitter.com/5dS33TOMYz
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 16, 2021
அப்போது சிவாங்கி சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியான முன்பே வா பாடலை பாடினார். இந்தப் பாடலைக் கேட்டு வியந்துபோன ஏ ஆர் ரஹ்மான் அங்கிருந்த போட்டியாளர்களிடம் ‘உங்களுக்கு சமைக்கும்போது தேன் தேவைப்பட்டால் சிவாங்கியை பாடவையுங்கள். தேன் தானாக வந்து சமையலில் விழுந்துவிடும்’ எனக் கூறினார். இதைக் கேட்ட சிவாங்கி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். இந்நிலையில் இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட சிவாங்கி ‘இதுக்கு மேல எனக்கு என்ன வேணும்?’ என பதிவிட்டுள்ளார்.