எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரின் மகள் லஷ்மி மற்றும் மருமகள் சுஜைனி கைகலப்பில் ஈடுபட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் பூம்புகார், பராசக்தி, மனோகரன் முதலிய பல திரைப்படங்களில் நடித்து வெற்றிப் படங்களை தந்தவர். இவரின் மகள் லக்ஷ்மி மற்றும் மகன் மருதுபாண்டி. இவர்கள் கூட்டுக் குடும்பமாக தேனாம்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மருதுபாண்டியின் மருமகள் மற்றும் மருதுபாண்டியன் மனைவி சுஜைனி வீட்டின் அருகில் இளநீர் விற்பனை செய்பவரை வீட்டின் காவலாளியாக பணியமர்த்தியிருக்கிறார் மற்றும் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.
இது மகள் லட்சுமிக்கு பிடிக்கவில்லை. லஷ்மி சுஜைனியிடம் இவருக்கு பதிலாக வேறு ஒருவரை காவலாளியாக நியமிக்கலாம் என கூறியிருக்கிறார். ஆனால் சுஜைனி மறுத்துள்ளார். இதனால் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த கைகலப்பில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் சுஜைனி. இதனைத் தொடர்ந்து சுஜைனி லஷ்மி மேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் லஷ்மியும் சுஜைனி மீது புகார் அளித்திருக்கிறார். எஸ்எஸ் ராஜேந்திரனின் மகளும் மருமகளும் கைகலப்பில் ஈடுப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.