Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் எஃப் ஐ ஆர் போடுங்க…. எனக்கு ரொம்ப கவலையா இருக்கு?…. கூலாக பேசிய விஜயபாஸ்கர்….!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு 3 ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ?

இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ ஆர்-ஐ பொறுத்த வரைக்கும், ஒரு அரசு மருத்துவக் கல்லூரிக்கு என்ன விதிமுறைகளை பின்பற்றி இருக்கிறோமோ,  அதே விதிமுறைகளை தான் பின்பற்றி நாங்கள் சான்றிதழ் கொடுக்கிறோம். மெடிக்கல் கல்லூரி தொடங்குவதற்கு அரசுக்கு ஆட்சபனை இல்லை என்று சான்று கொடுப்போம்.

தமிழ்நாடு அரசை பொருத்தவரைக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறையை பொறுத்தவரைக்கும்,  எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்ற சர்டிபிகேட் மட்டும்தான் நாங்கள் கொடுக்கிறோம். மீதி எல்லாமே மத்திய அரசு அனுமதி கொடுக்கிறது. அட்மிஷன் கொடுக்கிறது எம்ஜிஆர் மெடிக்கல் யூனிவர்சிட்டி. இப்ப கூட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு கூட இதே நடைமுறையை பின்பற்றி தான் ஒரு சான்று கொடுத்து இருக்காங்க. அப்படி என்றால் இது எல்லாத்துக்குமே எஃப்ஐஆர் போடணும். ஒரே நேரத்துல 11 மருத்துவக் கல்லூரி நாங்க பெற்று கொடுத்திருக்கிறோம் எடப்பாடியார் காலத்தில்…

அதுக்கு ஒரு எஃப்ஐஆர் போடலாம், அதையும் நான் சந்திக்க தயாரா இருக்கேன். அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டையும் பெற்றிருக்கிறோம்,  அதுக்கும் எஃப்ஐஆர் போடலாம். புதுக்கோட்டையில் ஒரு மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சிருக்கோம். அதுக்கும் எஃப்ஐஆர் போடலாம். அதனால் அரசியல் கால் புணர்ச்சியின்  உச்சகட்டம்.

இன்னைக்கு மினி கிளினிக் நிப்பாட்டிட்டாங்க, தாலிக்கு தங்கத்தை நிப்பாட்டிட்டாங்க,  மாசம் ஆயிரம் ரூபாய் கொடுக்குறதுக்கு வழி இல்ல, நிதி இல்லை. இன்னைக்கு மின்சார கட்டணத்தை உயர்த்திருக்கக்கூடிய இந்த சூழலில் மக்கள் விரோத திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய அவலங்களை திசை திருப்புவதற்காக, அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு துணை நிற்கக்கூடிய எங்களை போன்றவர்களை பழி வாங்குகிறது.

இது மிகப்பெரிய அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டமாக கருதுகிறோம். திருப்பியும் எப்ப வேணாலும் வரலாம் வந்தாலும் அதை சமாளிப்பதற்கு, எதிர்கொள்வதற்கு சட்டரீதியாக நாங்க தயாராக இருக்கிறோம் என்பதை உங்களுடன் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |