நடிகர் தனுஷ் கோபப்பட்ட விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தனுஷ் படிப்படியாக சினிமா துறையில் முன்னேறியவர். இவர் தன்னைப் பற்றி எவ்விதமான விமர்சனங்கள் வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தன் வேலையைப் பார்ப்பார். இவர் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். தனுஷ் அனைவரிடமும் மிகவும் பொறுமையாகவும் சாந்தமாகவும் பழகுபவர். அவர் தற்பொழுது கோபமாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்ற 2017-ம் வருடம் சில நடிகர் நடிகைகளின் நெருக்கமான புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியன. அந்நேரத்தில் தனுஷ் அவரின் திரைப்பட புரமோஷனுக்காக தெலுங்கு தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் போது தனுஷிடம் இந்த புகைப்படம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். தனுஷ் கேள்வியை புறக்கணித்து வந்தாலும் அவர்கள் திருப்பித் திருப்பிக் கேள்வியைக் கேட்டனர். இதனால் கோபமடைந்த தனுஷ் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு கிளம்பிச் சென்றார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.