Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

இதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட….. கலாய்த்த நெட்டிசன்கள்…. சரியான பதிலடி கொடுத்த நந்திதா …!!!

நடிகை நந்திதா ஸ்வேதா விமர்ச்சித்த நெட்டிஷன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நந்திதா ஸ்வேதா, தனது முதல் படத்திலேயே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர்நீச்சல், தேவி 2, புலி, நெஞ்சம் மறப்பதில்லை முதலிய படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் கவர்ச்சி இல்லாமல் கிராமத்து பெண்ணாக நடித்ததால் ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். இணையதளத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நந்திதா ஸ்வேதா அவ்வபொழுது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார் .

தற்போது நந்திதா குண்டாகி தோற்றமளிப்பதால் இணையதளவாசிகள் இவரை விமர்சனம் செய்து வருகின்றனர். இனி இவர் கதாநாயகியாக நடிக்க முடியாது என கூறிய நிலையில் நந்திதா ஸ்வேதா பதில் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, “சக பெண்களைப் போல் நானும் ஒரு பெண்ணே. உங்களால் எப்படி இதுபோன்ற கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க முடிகிறது. இப்படி சொல்வதால்தான் நரகத்தில் உள்ளது போல் இருக்கின்றது. இப்படி உடல் எடை அதிகரித்ததால் நானும் கவலைப்பட்டிருக்கிறேன். இருப்பினும் இது எனக்கு பிடித்திருக்கிறது” என பதிலளித்திருக்கிறார். இவர் விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்தில் மூன்றாவது ஹீரோயினாக இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |