தண்ணீரை அசுத்தப்படுத்தும் ஆகாயத்தாமரை செடிகளை எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சிறுகுளம், பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் அந்த குளங்கள் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து தண்ணீரை அசுத்தபடுத்தி வந்துள்ளது.
இந்த தாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின்படி இயந்திரம் மூலம் செடியை அகற்றியுள்ளனர். இதனை எம்.எல்.ஏ அசோகன், மாவட்ட கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.