Categories
மாநில செய்திகள்

இதுதான் அரசின் சாதனையா?…. கழிப்பறையே இல்லாத அரசு பள்ளி…. இப்படி ஒரு அவல நிலையா?…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பேரையூரில்  அரசு உயர்நிலைப்பள்ளி 1852 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2005 ஆம் ஆண்டில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆட்சியில் பல திட்டங்கள் மாணவர்களின் நலன்கருதி உருவாக்கப்பட்டிருந்தது.  மேலும் உறையூர் அரசு பள்ளி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாததால் மாணவர்கள்  மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் அதிகம் பயிலும் இந்த பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவிகள் திறந்தவெளியை  நாட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் போதிய இடவசதி இல்லாததால் மரத்தடியில் பாடம் கற்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆங்காங்கே சுவர் இருந்து சேதமடைந்துள்ளதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. அதனால் அரசு அதிகாரிகளும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக பேரையூரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கடந்த  2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

Categories

Tech |