அமெரிக்க நாட்டின் ஜார்ஜியாமாகாணத்தில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மாகாணத்தின் பல வளர்ச்சிகளில் முக்கியமான பங்கு வகிக்கின்றனர். இந்த நிலையில் இந்து சமூக மக்களை அங்கீகரிக்கும் வகையில் இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி இந்து புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று கவர்னர் பிரையன் கெம்ப் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்து புத்தாண்டு ஜார்ஜியாவை வீடு என அழைக்கும் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாகும். நம் மாகாணமானது இந்து அமெரிக்கர்களின் பங்களிப்பு காரணமாக அளவிடமுடியாத அளவுக்கு வளப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த குடும்பங்கள் மாகாணத்தின் கூட்டுபாரம்பரியம் மற்றும் வாழ்க்கைத் தரத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. மேலும் அவர்களின் மதமரபுகள் ஜார்ஜியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மைக்கு சேர்க்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.